Skip to main content

மருத்துவ சார்நிலை பணி நேர்காணல் தேர்வு பட்டியல் வெளியீடு.



மருத்துவ சார்நிலை பணிக்கு, நேர்காணலுக்கு தேர்வானோர் பட்டியல்டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் அடங்கிய ஊரக சுகாதாரப்
புள்ளியிலாளர் பதவிக்கான 49 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம்மூலம் நிரப்பும் பொருட்டு தேர்வாணையத்தால் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் வருகிற 19ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.

நேர்காணல் தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 101 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணைய தளமான www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தேர்வுக்கான நேரம் குறித்த தகவல் உள்ளடக்கிய அழைப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இருந்து அழைப்பாணையை பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து கொள்ளலாம்.இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி