Skip to main content

தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் - பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்

TET வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு: தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் - பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்

ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) முறையை ரத்து செய்ய வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தினர். தகுதிகாண் மதிப்பெண் முறையை எதிர்த்து பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் திங்கள்கிழமை
உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

 இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியது:

 ஆசிரியர் தகுதித் தேர்வில் 100-க்கும் அதிகமான மதிப்பெண் எடுத்த பலர் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம்பெறவில்லை. இதற்கு தகுதிகாண் மதிப்பெண் முறையே காரணம்.

 தகுதிகாண் மதிப்பெண் முறையில் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். படிப்பில் எடுத்த மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் 40 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் எடுத்த மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் 60 மதிப்பெண்ணும்  வழங்கப்படுகிறது.

 மொத்தமாக 100 மதிப்பெண்ணுக்கு ஒருவர் பெறும் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படுகிறது.

 தனியார் பள்ளிகளில் பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமும், ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண்ணும் பெற்றிருந்தாலும் நாங்கள் தேர்வுப் பட்டியலில் இடம்பெறவில்லை.  அதேநேரத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகையால் தேர்ச்சி பெற்ற பலர் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.  15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிளஸ் 2 தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் எடுப்பது மிகவும் சிரமம். இப்போது பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண்கள் அள்ளி

தரப்படுகின்றன. எனவே, தகுதிகாண் மதிப்பெண் முறையில் 5 ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களே அதிக அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 அடுத்த ஆண்டில் தகுதிகாண் மதிப்பெண்ணை அதிகரிக்க தகுதித் தேர்வை மீண்டும் எழுதினாலும், பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட். படிப்புக்கான தகுதிகாண் மதிப்பெண்ணை மாற்ற இயலாது. தகுதிகாண் மதிப்பெண் முறை இருக்கும் வரை நாங்கள் ஆசிரியராக பணி நியமனம் பெறுவது முடியாது.

 எனவே, தகுதிகாண் மதிப்பெண் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.   ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா