புதுடில்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி.,யின் தலைவராக, ரஜனி ரஸ்தான், 64, தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தும், யு.பி.எஸ்.சி., யின் தலைவராக உள்ள, பேராசிரியர் டி.பி.அகர்வாலின்
பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, அந்த அமைப்பின் புதிய தலைவராக, யு.பி.எஸ்.சி., உறுப்பினராக, தற்போது பணியாற்றும் ரஜனி ரஸ்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரஸ்தான், வரும் சனியன்று புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். அரியானா மாநில முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ரஸ்தான், 2010 ஏப்ரல், 19ல், யு.பி.எஸ்.சி., உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி