Skip to main content

வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது

தமிழகத்தை சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்தார்.
சென்னை கிழக்குத் தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன், கடந்த 2006-ம்
ஆண்டு சென்னை ஆஃபீசர்ஸ் அகாடமியில் பயின்று, பின் ராணுவத்தில் சேர்ந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள சோஃபியான் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் ராணுவ மேஜராக நியமிக்கப்பட்டார்.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல்களை துச்சமாக எண்ணி திறமையாக போரிட்டு உயரதிகாரிகளின் பாராட்டைப்பெற்றவர் அவர். தனக்கு கீழ் உள்ள படையினரை வழிநடத்துவதில் திறமை மிகுந்தவர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சோஃபியானில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், கடுமையாக போரிட்ட அவர் நாட்டுக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்தார்.

டெல்லியில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில், அவரது தியாகத்தை போற்றும் வகையில் மத்திய அரசு அவருக்கு அசோக் சக்ரா விருது வழங்க உள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்