Skip to main content

கிராம கல்விக் குழு கணக்காளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.!

தருமபுரி :தாற்காலிக அடிப்படையில் கிராம கல்விக் குழு கணக்காளர்கள்பணியிடத்துக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல்
முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
வட்டார வளமைய கட்டுப்பாட்டில் உள்ள இந்த பணியிடங்களில் 11 பேர் மாவட்ட அளவில் நியமிக்கப்பட உள்ளனர்.இவர்களுக்கு வட்டார வளமையம் மூலம் மாதந்தோறும் ரூ.9,900 தொகுப்பூதியமாக அளிக்கப்படும். விண்ணப்பிப்போர் ஆகஸ்ட் முதல் தேதியன்று 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பி.காம் கல்விச் சான்று, டாலி கணினி தகுதிச் சான்றுடன் அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வருகிற செப்.1ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். தகுதியானவர்களுக்கு மட்டும் எழுத்துத் தேர்வு அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வருகிற செப்.13ஆம் தேதி நடைபெறும்என்றார் அவர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்