Skip to main content

சத்துணவு ஊழியர்கள் மறியல் : விளக்கம் கேட்க உத்தரவு


கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களிடம் விளக்கம் கேட்க சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
அங்கன்வாடி குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்படும் உணவை மேலும் தரமானதாக தயாரித்து வழங்கிட அரசு மானியத் தொகையை உயர்த்தி
வழங்கிடவும், 32 ஆண்டுகளாக பணியாற்றும் சத்துணவுஅமைப்பாளர்கள், சமையலர், உதவியாளர், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் அனைவரையும் முழு நேர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
அவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், மறியலில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு வழக்கம் போல் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யவும், துறைரீதியாக விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கவும் சமூக நலத்துறையின் அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்