Skip to main content

தமிழ் பண்டிட் மதிப்பெண்ணை வெயிட்டேஜ் கணக்கில் சேர்க்க வேண்டும்.



சேரன்மகாதேவி ஆசிரியை ஐகோர்ட்டில் வழக்கு, பள்ளி கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ்தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை, வெயிட்டேஜ் மதிப்பெண் ணில் கணக்கிட கோரிய மனுவில் பள்ளி
கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், சேரன்மாதேவியை சேர்ந்த பவுசிநேசல் பேகம் (38), ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூ கத்தை சேர்ந்த நான், பி.லிட் (தமிழ்), பி.எட்., படித்துள்ளேன். மேலும் தமிழ் பண்டிட் படிப்பும் முடித்துள்ளேன். கடந்த 18.8.2013 அன்று நடந்த பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில், 150க்கு 94 மதிப்பெண் பெற்றேன். இதனையடுத்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தனர். தகுதித்தேர்வில் எடுத்த மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் ஆகியவற்றை கணக்கிட்டு, தகுதியானவர்களின் தற்காலிக பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.நான் 100க்கு 60.86 மதிப்பெண் எடுத்ததாகவும், பிற்படுத்தப்பட்ட முஸ்லி மை பொறுத்தமட்டில் 61.44 கட்&ஆப் நிர்ணயித்ததாக கூறி என்னை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்துவிட்டது. பிளஸ் 2, பி.லிட்., பி.எட்., ஆகியவற்றில் நான் பெற்ற மதிப்பெண்வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி எனக்கு, 60.86 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.பி.லிட்., பி.எட்., படித்தவர்களும், பி.லிட்., படித்து தமிழ் பண்டிட் முடித்தவர்களும், தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். பி.லிட்., பி.எட்., படித்தவர்களுக்கு பி.எட்., படிப்பில் பெற்ற மதிப்பெண் வெயிட் டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பி.லிட்., படித்து தமிழ் பண்டிட் முடித்தவர்களுக்கு தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண், வெயிட்டேஜ்மதிப்பெண்ணில் கணக்கில் எடுக்கப்படுகிறது.நான், பி.எட்., மற்றும் தமிழ் பண்டிட் படிப்பும் முடித்துள்ளேன். தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக கணக்கில் எடுத்தால், ஆசிரியர் தேர்வு வாரியம் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினருக்கு நிர்ணயித்துள்ள கட்&ஆப் மதிப்பெண்ணை விட அதிகமாக 62.13 மதிப்பெண் பெற்று விடுவேன்.

எனவே நான் தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் கணக்கில் எடுத்து, பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதி கே.கே.சசிதரன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் சேவியர் ரஜினி ஆஜரானார். மனு குறித்து பள்ளி கல்வித்துறை செய லாளர், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனங்கள் அனைத் தும் வழக்கின் இறுதி தீர்ப் பை பொறுத்தே அமையும் என உத்தரவிட்டுள்ளார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி