Skip to main content

பகுதிநேர ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்க உத்தரவு.



அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிப்புரியும் பகுதிநேரஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து, தகவல் அனுப்புமாறு, தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், 1090 தொடக்க மற்றும் ௩௦௭ நடுநிலை அரசு, அரசு
உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இதில், அரசுப்பள்ளிகளில் மட்டும், இசை, ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட பாடங்களுக்கு, பகுதிநேர கலையாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு,

இம்மாத துவக்கத்தில், மாதந்தோறும் 2,000 ரூபாய் ஊதிய உயர்வுஅளிக்கப்படும் என தகவல் வந்தது.தொடர்ந்து, சம்பள தொகை அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, மாவட்டந்தோறும் அரசுப்பள்ளிகளில் பணிப்புரியும் பகுதிநேர கலையாசிரியர்களது தகவல்களை சேகரித்து அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பணிப்புரியும் பகுதிநேரகலையாசிரியர் குறித்த விபரங்களை அனுப்புமாறு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தின் சார்பில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்