Skip to main content

உயர் கல்வி வியாபாரமாவதை தடுக்க மத்திய அரசு அதிரடி

உயர் கல்வி வியாபாரமாவதை தடுக்க மத்திய அரசு அதிரடி: பல்கலை மானிய குழுவை சீரமைக்க திட்டம் - தினமலர்
பல்கலை மானியக் குழுவை (யு.ஜி.சி.,) மறுசீரமைப்பு செய்யவும், உயர் கல்வி பிரிவின் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கவும், யு.ஜி.சி.,யின் முன்னாள் தலைவர் ஹரி கவுதம் தலைமையில், குழு ஒன்றை அமைத்து, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்
உத்தரவிட்டுள்ளது.

அதிக உயர் கல்வி மையங்கள், அதிக மாணவர் சேர்க்கை ஆகிய பிரச்னைகளால், உலகளவில், இந்திய உயர் கல்விப் பிரிவு மிகவும் பிரபலமாக உள்ளது. தற்போது நாடு முழுவதும், 726 பல்கலைகள், 38 ஆயிரம் கல்லுாரிகளில், 2.8 கோடி மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆண்டுதோறும், உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் சேரும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கல்லுாரிகள், பல்கலைகளை பொறுத்தவரை, அவற்றுக்கான விதிகளை வகுப்பதும், அனுமதியளிப்பதும், மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும், யு.ஜிசி.,யின் பணிகள்.கடந்த 1956ல், யு.ஜி.சி.,க்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது, 20 பல்கலைகள், 500 கல்லுாரிகள் மட்டுமே இருந்தன. மாணவர்கள் சேர்க்கையும், 2.1 லட்சம் மட்டுமே. தற்போது, மாணவர் சேர்க்கை உயர, தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகள் எண்ணிக்கை, திடீரென அதிகரித்ததே காரணமாக கூறப்படுகிறது. இவ்வாறு பல்கலைகள் துவக்கப்பட்டதும், அவற்றுக்கான ஒழுங்கு விதிகளை யு.ஜி.சி., கொண்டு வந்தது. ஆனால், சமீபத்திய புகார்கள் அடிப்படையில், நிகர்நிலை, தனியார் பல்கலைகள், முனைவர் பட்டங்களை விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.

மறுசீரமைப்பு:

இதற்கு காரணம், விதிகளை வகுத்த யு.ஜி.சி.,யால், அந்த விதிகளை, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஒழுங்காக பின்பற்றுகின்றனவா என்பதை கண்காணிக்கும் அமைப்பை கொண்டிருக்காதது தான் என்பதை, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை கண்டறிந்துள்ளது.இதன் அடிப்படையில், உயர் கல்வித்துறையை மேம்படுத்த, யு.ஜி.சி.,யை சீரமைத்து, வலுவானதாக்கவும், மறு சீரமைப்பு செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த, 1998ல், நாட்டில், போலி பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்த, அதிரடி நடவடிக்கை எடுத்தது, அப்போதைய மத்திய அரசு. இதற்காக அமைக்கப்பட்ட குழு, யு.ஜி.சி., சட்டத்தில் மாற்றம் கொண்டு வர, சில பரிந்துரைகளை வழங்கியது.இதையடுத்து, ஆறு பேர் கொண்ட குழு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையால் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த குழுவின் பரிந்துரைகளும், சட்டத்தில் இடம் பெறவில்லை. இந்த காரணங்களால், யு.ஜி.சி.,யால் கட்டுப்பாடுகளை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை.இதையும் கருத்தில் கொண்டு, தற்போது யு.ஜி.சி.,யின் சட்டத்தை முழுமையாக ஆய்வு செய்து, அதில் தேவையான மாற்றங்களை கொண்டுவர, முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மாற்றங்கள்:

இதையடுத்து, யு.ஜி.சி.,யின் முன்னாள் தலைவர் ஹரி கவுதமை தலைவராகவும், உயர்கல்வித் துறை இணை செயலர் சிசோர்டியாவை உறுப்பினர் செயலராகவும், பனாரஸ் இந்து பல்கலை ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜாரிவாலா, ஜவகர்லால் நேரு பல்கலையின் இணை துணைவேந்தர் கபில்கபூர் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழு, யு.ஜி.சி., சட்டங்கள் மற்றும் அதன் பணிகள் அனைத்தையும் ஆய்வு செய்து, ஆறு மாதத்தில் அறிக்கை தயாரித்து, மத்திய அரசிற்கு அளிக்கும். அதன் அடிப்படையில், மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என கூறப்படுகிறது.குழு அமைப்பது, அதற்கான தேவையான வசதிகளை ஏற்படுத்துவது மற்றும் குழுவின் பணிகள் குறித்து, கடந்த மாதம், 30ம் தேதி, மத்திய உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குழுவின் பணிகள்:

*யு.ஜி.சி.,யின், தற்போதைய செயல்பாடுகளை ஆய்வு செய்து, மறு கட்டமைப்பு செய்யவும், மாற்றி அமைக்கவும், தேவையான ஆலோசனைகளை வழங்கும்.

*யு.ஜி.சி.,யின் விதிகளில் உள்ள சிறந்த அம்சங்களையும், ஓட்டைகளையும் ஆராயும்.

*யு.ஜி.சி.,யின் கட்டுப்பாடு விதிகள்; நிதி ஒதுக்கீடு ஆகிய இரண்டு பணிகளையும் தொய்வின்றி நிறைவேற்ற வழிவகைகளை வழங்கும்.

*அங்கீகாரம் அளிக்கும், 'நாக்' அமைப்பை மாற்றி அமைக்க ஆலோசனைகள் வழங்குதல்.

*நிதி வழங்கும் திட்டத்தை மாற்றி அமைத்து, நிதி பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல்.

*மத்திய உயர்கல்வித் திட்டத்தின் நெறிமுறைகள் படி, கல்வி நிறுவனங்களின் செயல்பாடு அடிப்படையில், நிதி வழங்கும் திட்டத்தை ஏற்படுத்துதல்.

*பல்கலைகள், கல்லுாரிகளில் கற்பித்தலுக்கான சூழலை ஒழுங்குபடுத்துதல், அடிப்படை அறிவியலில் தரமான ஆய்வுக்கான சூழலை ஏற்படுத்துதல்.
உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்