Skip to main content

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிர்வாகப் பணியிடங்கள்



நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கே.வி.எஸ்., என்ற சுருக்கமான பெயரால் பலராலும் அறியப்படுகின்றன. கல்வித் துறையில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்து வரும் இந்தப் பள்ளிகளில் காலியாக உள்ள 669 நிர்வாகப் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள் மற்றும் காலியிட விபரங்கள்: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிரின்சிபால் பிரிவில் 145 இடங்களும், டெக்னிகல் ஆபிசர் பிரிவில் 3ம், உதவியாளர் பிரிவில் 81ம், அப்பர் டிவிசன் கிளார்க் பிரிவில் 120ம், லோயர் டிவிசன் கிளார்க் பிரிவில் 284ம், இந்தி டிரான்ஸ்லேட்டர் பிரிவில் 7ம், கிரேடு 2 ஸ்டெனோகிராபர் பிரிவில் 29ம் காலியிடங்கள் உள்ளன.

வயது: பிரின்சிபால் பிரிவுக்கு 35 முதல் 50ம், டெக்னிகல் ஆபிசர் பிரிவுக்கு 35ம், அசிஸ்டென்ட் பிரிவுக்கு 35ம், அப்பர் டிவிசன் கிளார்க் பிரிவுக்கு 30ம், லோயர் டிவிசன் கிளார்க் பிரிவுக்கு 27ம், இந்தி டிரான்ஸ்லேட்டர் பிரிவுக்கு 28ம், ஸ்டெனோகிராபர் பிரிவுக்கு 27ம் வயது வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிரின்சிபால் பதவிக்கு முது நிலைப் பட்டப் படிப்பு, டெக்னிகல் ஆபிசர் பிரிவுக்கு 6 வருட பணியனுபவத்துடன் பொறியியல் பட்டப் படிப்பு, அசிஸ்டென்ட் மற்றும் அப்பர் டிவிசன் கிளார்க் பிரிவுகளுக்கு பட்டப் படிப்பு, லோயர் டிவிசன் கிளார்க் பிரிவுக்கு பிளஸ் 2 படிப்பு, இந்தி டிரான்ஸ்லேட்டர் பிரிவுக்கு ஆங்கிலம் அல்லது இந்தியுடன் முது நிலைப் பட்டப் படிப்பு, ஸ்டெனோகிராபர் பதவிக்கு சிறப்புத் தகுதியுடன் பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பு தேவை.

விண்ணப்பிக்கும் முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு சென்று ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.09.2014

இணையதள முகவரி: http://kvsangathan.nic.in/, https://www.jobapply.in/kvs/.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்