Skip to main content

இ.பி.எப்., டிபாசிட்களுக்கு 8.75 சதவீத வட்டி நிர்ணயம்


''தொழிலாளர் சேமநல நிதியான இ.பி.எப்., டிபாசிட்களுக்கு, நடப்பு நிதியாண்டில், 8.75 சதவீத வட்டி வழங்கப்படும்,'' என, சேமநல நிதி அமைப்பின் மத்திய ஆணையர் ஜலான் கூறினார். தொழிலாளர் சேமநல நிதி
டிபாசிட்களுக்கு, நடப்பு நிதியாண்டில் (2014 15) வழங்கப்பட உள்ள வட்டி வீதம் குறித்து முடிவு செய்ய, தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின், மத்திய அறக்கட்டளை வாரிய கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தொழிலாளர் சேமநல நிதி சந்தாதாரர்களின் டிபாசிட்களுக்கு, கடந்த நிதியாண்டைப் போலவே, இந்த நிதியாண்டும், 8.75 சதவீத வட்டி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சேமநல நிதி அமைப்பின், மத்திய ஆணையர் ஜலான் கூறினார். அவர் மேலும் கூறுகையில், ''வட்டி வீதம் குறித்த முறையான அறிவிப்பை, மத்திய நிதி அமைச்சகம், பின் வெளியிடும்,'' என்றார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.