Skip to main content

ஆசிரியர் பல்கலையில் எம்பில் படிப்பில் சேர ஆக.25 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தில் எம்பில் படிப்பில் சேர விரும்புபவர்கள்விண்ணப்பிக்க வரும் 25ம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் எம்.பில்., முழுநேரம் மற்றும் பகுதி நேர கல்வியாக பல்வேறு பாடத்தலைப்புகளில் கற்றுத்தரப்படுகின்றன.
2014&15ம் கல்வி ஆண்டில் இப்பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயில கடந்த 4ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் 25ம் தேதிவரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என பதிவாளர் அறிவித்துள்ளார்.விண்ணப்பங்களை பெற விரும்புவோர் பதிவாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்விபல்கலைக்கழகம், சென்னை 5 என்ற முகவரிக்கு விண்ணப்ப கட்டணத்தை டிடிஆக எடுத்து அனுப்ப வேண்டும்.பொதுப்பிரிவினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரு.250 கட்டணம் ஆகும். இவர்கள் ஜாதி சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும்25ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்கவேண்டும்.மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம்www.tnteu.inஎன்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்