Skip to main content

பிளஸ் 2 தனித் தேர்வு: ஆக.25 முதல் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 தனித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை திங்கள்கிழமை (ஆக.25) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் தனித் தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி, விண்ணப்ப எண்ணைப் பதிவு செய்து, பிளஸ் 2 தனித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யலாம்.

எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வில் மீண்டும் பங்கேற்பதோடு, எழுத்துத் தேர்வுக்கும் வருகை புரிய வேண்டும். அதேபோல், முதல்முறையாக நேரடி தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுவோர், மொழிப்பாடம் இரண்டாம் தாள், சிறப்பு மொழி (தமிழ்) தேர்வுகளில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளைக் கண்டிப்பாக எழுத வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்