Skip to main content

குரூப் 2 தேர்வு ரிசல்ட் 15 நாளில் வெளியீடு - தினகரன்

குரூப் 2 தேர்வுக்கான ரிசல்ட் இன்னும் 15 நாட்களில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணி யன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) செ. பாலசுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், தமிழ்நாடு மாநில நீதிப்பணியில் காலியாக உள்ள 162 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் சட்டக்கல்வியில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை இணைய வழியில் மட்டுமே அனுப்ப வேண்டும். இப்பதவிக்கான தேர்வு அக்டோபர் 18 மற்றும் 19ம் தேதிகளில் 9 மையங்களில் நடைபெறும். இப்பதவிக்கு விண்ணப்பிக்க செப். 21ம் தேதி கடைசி நாள். மேலும் இப்பதவிக்கு விண் ணப்பிப்பதற்கான வழிமுறை மற்றும் விவரங்கள், தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான அனைத்து பணிகளும் 4 மாதத்தில் முடிக்கப்படும்.

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், தமிழ்நாடு மாநில நீதிப்பணியில் காலியாக உள்ள 162 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் சட்டக்கல்வியில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை இணைய வழியில்மட்டுமே அனுப்ப வேண்டும். இப்பதவிக்கான தேர்வு அக்டோபர் 18 மற்றும் 19ம் தேதிகளில் 9 மையங்களில் நடைபெறும். இப்பதவிக்கு விண்ணப்பிக்க செப். 21ம் தேதி கடைசி நாள். மேலும் இப்பதவிக்கு விண் ணப்பிப்பதற்கான வழிமுறை மற்றும் விவரங்கள், தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான அனைத்து பணிகளும் 4 மாதத்தில் முடிக்கப்படும்.

குரூப் 2 தேர்வில் அடங்கிய துணை வணிக வரி அதிகாரி, சார் பதிவாளர் (கிரேடு&2), சிறை துறை நன்னடத்தை அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர், ஜூனியர் எம்ப்ளாய்மென்ட் அதிகாரி, உதவி தனி அலுவலர், ஆடிட் இன்ஸ்பெக்டர், கைத்தறி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவி யாளர், உள் ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 1,064 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை 6.65 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இத்தேர்வுக்கான ரிசல்ட் இன்னும் 15 அல்லது 20 நாட்களில் வெளியிட துரித நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளது.

வி.ஏ.ஓ. பதவியில் 2,342 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் 14ம் தேதி நடத்தப்பட்ட தேர்வுக்கான ரிசல்ட் இன்னும் 2 மாதத்தில் வெளியிடப்படும்.

உதவிக் கால்நடை மருத்துவர் பதவியில் சுமார் 686 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சிறப்பு தகுதி தேர்வு மற்றும் சுமார் 315 காலியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். குரூப் 4 பதவியில் அடங்கிய சுமார் 3,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும். இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார்.

பாலசுப்பிரமணியன்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்