Skip to main content

மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு (CTET) அறிவிப்பு

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசி்ரியர் பணியில் சேருவதற்கான தகுதி தேர்வு (CTET) செப்டம்பர் 2014 நடத்தப்பட உள்ளது. மத்திய பாடத்திட்ட அமைப்பான Central Board of Secondary Education இத்தேர்வை நடத்துகிறது.

மத்திய அரசு பள்ளிகள் தவிர தனியார் ஆங்கில வழி பள்ளிகளுக்கும் (CTET) தேர்வு பொருந்தும். CTET தேர்வு இரண்டு தாள்களை கொண்டதாகும்.




தாள்-I -ல் தகுதி பெறுபவர் 1 முதல் 5 வகுப்பிற்கான ஆசிரியர்களாக பணியாற்றும் வாய்ப்பை பெறலாம்.

தாள்-II -ல் தகுதி பெறுபவர்கள் 6 முதல் எட்டாம் வகுப்பிற்கான ஆசிரியர்களாக பணியாற்றும் வாய்ப்பை பெறலாம். 1 முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்ற விரும்புபவர்கள் இருதாள்களிலும் தகுதி பெற வேண்டும்.




கல்வித்தகுதி: 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்க நிலை பிரிவிற்கான ஆசிரியர்களுக்கு, குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் + 2 தேர்ச்சியுடன் இரண்டு வருட ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

6 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று ஒரு வருட பி.எட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கல்வியியல் பிரிவில் இளநிலை அல்லது டிப்ளமோ பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அவர்களது கல்வி தகுதியில் தேர்ச்சி பெற்ற பின்னரே CTET தகுதி சான்றிதழ் செல்லுபடியாகும்.




தேர்வு கட்டணம்: தாள் - I அல்லது தாள் - II என்ற ஏதாவதொரு தேர்விற்கு, பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300.

தாள் - I மற்றும் தாள் - II என்ற இரு தேர்வுகளுக்கு பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500.

தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் டெபிட், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம் அல்லது செல்லானை பயன்படுத்தி Secretary, Central Board of Secondary Education, Delhi என்ற பெயரில் CBSE Syndicate Bank அல்லது canara Bank ரொக்கமாக செலுத்தலாம்.




தேர்வு நடைபெறும் தேதி:

தாள் - II 21.09.2014 காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும்.

தாள் - I 21.09.2014 பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். இரு தேர்வுகளும் தலா 2.30 மணி நேரம் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு பதிவு எண் கொடுக்கப்படும். பதிவு எண்ணுடன் கூடிய ஆன்லைன் படிவத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.




ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.08.2014

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 06.08.2014

தேர்வுக்கான அனுமதி சீட்டை 22.08.2014 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ctet.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன