Skip to main content

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்த்தப்படாது

புது டெல்லி, ஜூலை.18 - மத்திய அரசு ஊழியர்களின் வயதை 60-ல் இருந்து 62-ஆக உயர்த்தும் திட்டம் இல்லை என்று பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரிப்பது தொடர்பாக அரசின்
பரிசீலனையில் திட்டம் ஏதும் உள்ளதா என்று பாராளுமன்ற்ததில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய பணியாளர் பொது துறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய அரசிடம் அப்படி ஒரு திட்டமும் இல்லை என்று குறிப்பிட்டார்.

மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், விடுமுறை சுற்றுலாச் சலுகையின் கீழ் போலியான ஆவணங்களை காட்டி செலவுத் தொகையை திரும்ப பெற மத்திய அரசு ஊழியர்கள் முயற்சித்தது கணடறியப்பட்டால் அவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு அவதாரம் விதிக்கப்படுவதுடன், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு அந்தச் சலுகையைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும், என்று ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி