Skip to main content

வெளிமாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்தவர்கள் செய்ய வேண்டியது

வெளிமாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்தவர்கள் செய்ய வேண்டியது...தினமலர்
வெளிமாநிலங்களில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்த மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, ஆறுவகை சான்றிதழ்களை அனுப்ப வேண்டும் என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்
தெரிவித்துள்ளது.


மதிப்பீடு: ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படித்த தமிழக மாணவர்கள், அம்மாநிலங்கள் வழங்கிய சான்றிதழை, தமிழக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்திடம் சமர்ப்பித்து, மதிப்பீடு செய்ய வேண்டும்.

இதன்பிறகே, தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யவும், டி.இ.டி., (ஆசிரியர் தகுதித்தேர்வு) தேர்வை எழுதவும் முடியும். இந்த வகையில், 2,000 பேர், தமிழக கல்வித் துறையிடம், மதிப்பீடு செய்ய காத்திருக்கின்றனர். இந்நிலையில், வெளிமாநில சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

நகல்களுடன்...

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், வெளி மாநிலங்கள் வழங்கிய, ஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ், ஆசிரியர் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ்(டி.சி.,), கோர்ஸ் சர்ட்டிபிகேட் ஆகியவற்றின் நகல்களை, விண்ணப்பித்துடன் இணைக்க வேண்டும்.

மேலும், 500 ரூபாய் டிடி மற்றும் வெளிமாநில ஆசிரியர் கல்வித் துறை செயலர் பெயரில், 300 ரூபாய்க்கு, டிடி ஆகியவற்றுடன், இயக்குனர், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், டி.பி.ஐ., வளாகம், கல்லூரி சாலை, சென்னை - 6 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா