Skip to main content

தனியார் வேலை வாய்ப்புப் பணியமர்த்தல் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலங்களில் தனியார் வேலை வாய்ப்புப் பணியமர்த்தல் பிரிவு பணியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்!

மாநிலம் முழுதும் உள்ள 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நடத்தப்படும் தனியார் வேலை வாய்ப்பு பணியமர்த்தல் உதவிப் பிரிவுகளுக்கான பணியாளர் பதவிக்கு பின் வரும் தகுதியுடையோர்
சனிக்கிழமை மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொ) வி. வாசுதேவன் வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் மாநிலத்தின் 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் 32 ( MIS ) பணியாளர்கள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால், வெளி முகமை (Outsourcing) முறையில் நியமிக்கப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி :
MBA(HR) / MSW(HR), MA(Personnel Management)-(நேரிடையாக முழுநேர கல்வி பயின்றவர்கள் மட்டும்.) 

வயது வரம்பு :
24 வயது முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்கள். 

வேலைவிவரம்: 
வேலை நாடுநர்களுக்கு தனியார் துறையில் பணியமர்த்தம் செய்வது, தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பது. 

முன் அனுபவம்: 
2 ஆண்டுகளுக்கு குறையாமல் மனிதவளத் துறையில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். மாத ஊதியம்- ரூ.20,000 (தொகுப்பூதியம்) மேற்காணும் தகுதியுடையோர் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை 
எண்.42, 
ஆலந்தூர் ரோடு, 
ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், 
கிண்டி, 
சென்னை. 600 032 -என்ற முகவரியில் அமைந்துள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு பதிவு அஞ்சல் மற்றும் ovemcl@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக (26.7.2014) சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்துக்குள் சென்று பார்வையிடலாம்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா