Skip to main content

துவக்கப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: ஸ்மிருதி இரானி

தொடக்கப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம், கடந்த 2009 - 10ம் ஆண்டின் நிலையான 9.11% இலிருந்து, 2013 - 14ம் ஆண்டில், 4.67% ஆக குறைந்துள்ளது என்று மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி
தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தொடக்கப்பள்ளி அளவில், பழங்குடியின குழந்தைகளின் வருகை விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது கவலைத்தரும் விஷயமாக உள்ளது. 

துவக்கப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்பொருட்டு, துவக்கப் பள்ளிகளில், சிறப்பான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

மேலும், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலுள்ள குறைபாடுகளை தெரிவிக்கும்படி, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

மேலும், பள்ளிப் பாடத்திட்டத்தில், பாலின விகிதாச்சாரத்தை சமன்படுத்தும் வகையிலான ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்