Skip to main content

பள்ளி குழந்தைகளுக்கு சாலை விழிப்புணர்வு: 'காமிக்' புத்தகம் வெளியிடுகிறது ஐ.ஆர்.சி.,


பள்ளி குழந்தைகளுக்கு, சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்தியன் ரோடு காங்கிரஸ் ஐ.ஆர்.சி., சார்பில், இலவச, 'காமிக்' புத்தகம், வரும், 25ம் தேதி வெளியிடப்படுகிறது.
பள்ளிக் குழந்தைகள் மத்தியில், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்தினால், எதிர்காலத்தில், வெளிநாடுகளைப் போல், போக்குவரத்து கட்டுப்பாடுகளை, இந்தியாவில் அமல்படுத்த முடியும். இதை கருத்தில் கொண்டு, பள்ளி குழந்தைகளுக்கு, சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, நாடு முழுவதற்குமான சாலை விதிகளை வகுத்தளித்துள்ள, ஐ.ஆர்.சி., முடிவு செய்துள்ளது. இதற்காக, சாலை பாதுகாப்பு விதிகள், விழிப்புணர்வு அடங்கிய புத்தகத்தை தயாரித்துள்ளது. ஒன்பது முதல், 14 வயதுள்ள குழந்தைகளுக்கு, இப்புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. இம்மாதம், 25ம் தேதி, சி.ஐ.டி., நகர், சென்னை மாநகராட்சி பள்ளியில், இந்த புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது. ஐ.ஆர்.சி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'குழந்தைகள் மனதில், எளிதாக பதியும் வகையில், 'மிக்கி மவுஸ், டொனால்ட் டக்' போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மூலம், 'காமிக்ஸ்' வடிவில் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது' என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்