Skip to main content

5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் நலன், பயிற்சி மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்தார். இது
தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக புதன்கிழமை தாக்கல் செய்த பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்.
"மத்திய அரசின் கீழ் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தற்போது வாரத்தில் ஐந்து வேலை நாள்கள் உள்ளன. அதை வாரம் ஆறு நாள்களாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. அதுபோன்ற கோரிக்கைகளையோ, யோசனையையோ மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. அதே போல் ஈட்டிய விடுப்பு, சாதாரண விடுப்பு ஆகியவற்றை உயர்த்தும் திட்டத்தையும் அரசு பரிசீலிக்கவில்லை' என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்