திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில், எம்.எட்., வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆகஸ்ட் 31ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்கிறது.
பல்கலைகழக தொலைநிலை கல்வி மையம் சார்பில், 2014-15 ஆண்டிற்கான முதுநிலை கல்வியில், (எம்.எட்.,) படிப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு
வருகிறது. இளம் கல்வியியலில் (பி.எட்.,) 50 சதவீத மதிப்பெண் பெற்று, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் இரண்டாண்டு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை, பாரதிதாசன் பல்கலை தொலை நிலை கல்வி மையத்திலும், உறுப்பு கல்லூரிகளிலும், அனைத்து பயிற்சி மையங்கள் மற்றும் படிப்பு மையங்களிலும் வழங்கப்படும். 500 ரூபாய்க்கான டி.டி., வழங்கி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தை, பல்கலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தால், 500 ரூபாய்க்கான டி.டி., யுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை பெற ஆகஸ்ட், 14ம் தேதி வரை அவகாசம் உண்டு. நுழைவு தேர்வு ஆகஸ்ட், 31 ம்தேதி நடக்கிறது. மேலும், விவரங்களுக்கு 0431-2407027, 2407054 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.