Skip to main content

இன்று சூலை 28



நிகழ்வுகள்

1493 - மாஸ்கோவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

1540 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் ஆணைப்படி தொமஸ் குரொம்வெல் நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் ஹென்றி தனது ஐந்தாவது மனைவி கத்தரீனை மணந்தான்.

1586 - முதற்தடவையாக உருளைக் கிழங்கு பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்யப்படட்து.

1609 - பெர்முடாவில் ஆங்கிலேயர்கள் குடியேறினர்.

1794 - பிரெஞ்சுப் புரட்சி: மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.

1821 - பெரு ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.

1914 - முதலாம் உலகப் போர் ஆரம்பமானது. சேர்பியா மீது ஆஸ்திரியா-ஹங்கேரி போர் தொடுத்தன.

1915 - ஐக்கிய அமெரிக்காவின் ஹெயிட்டி முற்றுகை ஆரம்பமானது.

1943 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகர் மீது பிரித்தானியா குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதில் 42,000 ஜேர்மனியர்கள் கொல்லப்பட்டனர்.

1945 - அமெரிக்க போர் விமானம் ஒன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 79ம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

1957 - ஜப்பானின் இசகாயா என்ற இடத்தில் மழை, மற்றும் மண்சரிவு காரணமாக 992 பேர் கொல்லப்பட்டனர்.

1965 - வியட்நாம் போர்: தெற்கு வியட்நாமில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை 75,000 இலிருந்து 125,000 ஆக அதிகரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சன் அறிவித்தார்.

1976 - சீனாவில் டங்ஷான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 242,769 பேர் கொல்லப்பட்டனர். 164,851 பேர் காயமடைந்தனர்.

1996 - வாஷிங்டனில் கென்னவிக் என்ற இடத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

2005 - ஐரியக் குடியரசு இராணுவம் தனது 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுகுக் கொண்டு வருவதாக அறிவித்தது.

2005 - இங்கிலாந்து, பேர்மிங்காம் நகரைச் சூறாவளி தாக்கியதில் £4,000,000 பெறுமதியான சொத்துகக்ள் சேதமடைந்தன. 39 பேர் காயமடைந்தனர்.

2006 - ஈழப்போர்: வாகரையில் இலங்கைப் போர் விமானங்கள் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1936 - சோபர்ஸ், மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் துடுப்பாளர்

1951 - சந்தியாகோ கலத்ராவா, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர்

1954 - குகொ சவெஸ், வெனிசுவேலா ஜனாதிபதி

1977 - மனு ஜினோபிலி, ஆர்ஜெண்டீனிய கூடைப்பந்து ஆட்டக்காரர்

சிறப்பு நாள்

பெரு - விடுதலை நாள் (1821)

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா