Skip to main content

இன்று, ஜூலை 27

நிகழ்வுகள்

1214 - பிரான்சில் இடம்பெற்ற போரில் இரண்டாம் பிலிப் இங்கிலாந்தின் ஜோனை வென்றான்.

1549 - பிரான்சிஸ் சேவியர் அடிகள் ஜப்பானை அடைந்தார்.

1627 - தெற்கு இத்தாலி நகரான சான் செவேரோவை நிலநடுக்கம் தாக்கியது.

1794 - பிரெஞ்சுப் புரட்சி: புரட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்ட 17,000 பேரத் தூக்கிலிட ஆதரித்தமைக்காக மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் கைது செய்யப்பட்டார்.

1862 - சான் பிரான்சிஸ்கோ வில் இருந்து பனாமா நோக்கிச் சென்று கொண்டிருந்த "கோல்டன் கேட்" என்ற கப்பல் மெக்சிக்கோவில் தீப்பிடித்து மூழ்கியதில் 231 பேர் கொல்லப்பட்டனர்.

1865 - வெல்சிய குடியேறிகள் ஆர்ஜெண்டீனாவின் சூபூட் பள்ளத்தாக்கை அடைந்தனர்.

1880 - இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போர்: மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப்கானியப் படைகள் பிரித்தானியரை வென்றனர்.

1921 - பிரெட்றிக் பாண்டிங் தலைமையில் டொறொண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இன்சுலின் கண்டறியப்பட்டது.

1929 - மூன்றாவது ஜெனீவா உடன்படிக்கை

1941 - ஜப்பானியர்கள் பிரெஞ்சு இந்தோ-சீனாவைக் கைப்பற்றினர்.

1953 - கொரியப் போர் முடிவு: ஐக்கிய அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. தென் கொரியா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், உடன்பாட்டை மதிப்பதாக வாக்குறுதி தந்தது.

1955 - ஆஸ்திரியாவில் மே 9, 1945 முதல் நிலை கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் நட்பு நாடுகளின் படைகள் அங்கிருந்து விலகின.

1975 - விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரத் தலைவர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.

1983 - வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்: கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

1990 - பெலாரஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.

1990 - திரினிடாட் டொபாகோவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு நாட்கள் வைத்திருந்தனர்.

1997 - அல்ஜீரியாவில் "சி செரூக்" என்ற இடத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

2002 - உக்ரைனின் லுவிவ் நகரில் வான் களியாட்ட நிகழ்ச்சியின் போது போர் விமானம் ஒன்று மக்களின் மீதூ வீழ்ந்ததில் 85 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயமடைந்தனர்.

2007 - பீனிக்ஸ், அரிசோனாவில் இரண்டு ஹெலிகப்டர்கள் வானில் மோதின.

பிறப்புகள்

1824 - அலெக்சாண்டர் டுமாஸ், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1895)

1853 - விளாடிமிர் கொரலென்கோ, சோவியத் எழுத்தாளர் (இ. 1921)

1879 - நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழறிஞர் (இ. 1959)

1955 - அலன் போடர், ஆஸ்திரேலிய துடுப்பாளர்

இறப்புகள்

1953 - சோமசுந்தரப் புலவர், ஈழத்துக் கவிஞர் (பி. 1878)

1987 - சலீம் அலி, இந்தியப் பறவையியல் வல்லுநர் (பி. 1896)

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.