Skip to main content

ஆகஸ்ட் 1 க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்.பி.,அறிவிப்பு.!


ஆகஸ்ட், 1ம் தேதிக்குள், 10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்'என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது. 
'வரும், 30ம் தேதி, டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களின் இறுதி பட்டியல்
வெளியிடப்படும்' என, ஏற்கனவே, டி.ஆர்.பி., அறிவித்து இருந்தது.இதற்கு,ஒரு சில தினங்களே அவகாசம் இருப்பதால், தேர்வு பட்டியலை எதிர்பார்த்து, தேர்வர்கள்ஆவலுடன் உள்ளனர்.

இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை கூறியதாவது: தேர்வு பட்டியலை, இணையதளத்தில் வெளியிடுவதற்கான பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன. திட்டமிட்டபடி, பணி முடிந்தால், வரும், 30ம் தேதி, 10,700 ஆசிரியர்களின் தேர்வுபட்டியல் வெளியாகும். 


பணி முடிய, சற்று கால தாமதம் ஏற்பட்டால், ஒரு நாள் தள்ளிப் போகலாம். எப்படியும், ஆக., 1ம் தேதிக்குள், இறுதி பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

TN school lab Assistant Official Notification for Chennai

TN school lab Assistant Official Notification for Chennai

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன