Skip to main content

எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆக.14 கடைசி நாள்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பல்கலைக்கழகத்
தொலைநிலைக் கல்வி மையத்தில் முதுகலை கல்வியியல் (எம்.எட்) படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஜூன் 30-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பி.எட். பாடத்தில் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று, 2 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மட்டுமே இப்படிப்பில் சேர தகுதியுடையவர்கள்.

பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையம், உறுப்புக் கல்லூரிகள், அனைத்துப் பயிற்சி மையங்கள், படிப்பு மையங்களில் ரூ.500-க்கான வங்கி வரைவோலையை அளித்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பங்களை பல்கலைக்கழக வலைதளத்தின் http://www.bdu.ac.in/cde_admission.php மூலம் பதிவிறக்கம் செய்து கொள்பவர்கள் ரூ.500-க்கான வங்கி வரைவோலையையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 31-ம் தேதிக்குள் அளிக்கலாம் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி கடைசிநாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு 0431-2407027,28,54.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2