Skip to main content

1,400 இளநிலை உதவியாளர்கள் 25, 26ம் தேதி பணி நியமனம்.

பள்ளி கல்வி துறையில், 1,395 இளநிலை உதவியாளர்கள், வரும்,25, 26ம்தேதிகளில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தேர்வில்
தேர்வு பெற்ற இளநிலை உதவியாளர்களில், 1,395 பேர், பள்ளி கல்வித்துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நிகழ்ச்சி, ஆன்-லைன் வழியில், வரும், 25ம் தேதி மற்றும் 26ம் தேதி நடக்கிறது.தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களின் முகவரி அடங்கிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, நேரில் செல்ல வேண்டும். ஒரு மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு, 25ம் தேதி, காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.சொந்த மாவட்டங்களில் காலியிடம் இல்லாதவர்களுக்கும், வெளி மாவட்டங்களில், பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கும், 26ம் தேதி, காலை, 9:00 மணிக்கு கலந்தாய்வு நடத்தப்படும்.

தேர்வு பெற்றவர்கள், ஒரு மணி நேரம் முன்னதாக, முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வர வேண்டும். டி.என்.பி.எஸ்சி.,யால் வழங்கப்பட்ட துறை ஒதுக்கீட்டு உத்தரவு, கல்வி சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்களை, தவறாமல் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்