Skip to main content

TNTET: 12 ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் இறுதி பட்டியல் வரும் வியாழன் அன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
மேலும் ஜூலை முதல் வாரத்தில் இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதில் இந்த ஆண்டு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பளிப்பதாகவும் மற்றும் இந்த ஆண்டிற்கான அறிவிப்பு ஜூலை இரண்டாம் வாரத்தில் வெளியிடப்பட்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கருத்து நிலவுகிறது.

பட்டியல் ஜுலை இரண்டாம் வாரத்தில் தான் வெளியிடப்பட்டு உடனடியாககலந்தாய்வு நடைபெற்று ஜுலை 15 ஆம் தேதி (கல்வி வளர்ச்சி நாள்) பணி நியமன ஆணை வழங்கப்படலாம் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஒரு சிலர் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இது போன்று பல கருத்துகள் முன்னதாகவே பல முறை வெளியாகியுள்ளதால் உறுதியான செய்தி விரைவில் கிடைக்கும் வரை காத்திருப்போம்!.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2