தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவர் மற்றும் 7 உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. இத்தேர்வாணையம் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் கொண்டது. இதன் தலைவராக இருந்த நவநீதகிருஷ்ணன் ராஜ்சபா இடைத்தேர்லுக்கான அ.தி.மு.க., உறுப்பினராக 
போட்டியிடுவதால் அப்பதவியை ராஜினாமா செய்தார். தலைவர் பதவி காலியாகி 9 நாட்கள் ஆகிறது. புதிய தலைவர் நியமிக்கப்படாததால் தேர்வு முடிவு அறிவிப்பு, புதிய பணியிடங்களுக்கான அறிவிப்புகள் போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க முடியவில்லை. இதே போல தேர்வாணையத்தில் 7 உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளன. தேர்வாணை முடக்கம் பல இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் முடக்கியுள்ளது.
 இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.     மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி