Skip to main content

உதவி பேராசிரியர் நியமனத்திற்கு மேலும் சில தகவல்களை சமர்ப்பிக்கவேண்டும்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட உள்ள உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பாக மேலும் சில தகவல்களை சமர்ப்பிக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாகக்கிடக்கும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து அதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம்
அறிவித்தது. இதைத்தொடர்ந்து விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 25-11-2013 முதல்6-12-2013 வரை நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்த்தலின்போது அவர்கள்பெற்ற மதிப்பெண் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.அரசு உத்தரவுப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் மேலும் சில தகவல்களை சேகரிக்கவேண்டி உள்ளது. எனவே கேட்கப்படும் சரியான ஆவணங்களை தேர்வர்கள் சமர்ப்பிக்கவேண்டும்.

தேர்வர்கள் பி.எட். மற்றும் எம்.எட் கல்லூரிகளில் பெற்றசர்வீசஸ் பற்றிய விவரத்தை படிவம் 1-ல் தெரிவித்து சமர்ப்பிக்கவேண்டும்.அவர்கள் எம்.பில். மற்றும் பட்டப்படிப்பை தொலை தூரக்கல்வியில் படித்தார்களா?அல்லது திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தார்களா? என்பதற்கு படிவம் 2-ஐ சமர்ப்பிக்கவேண்டும்.

சமர்ப்பிக்கவேண்டிய இடம் காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி ஆகும்.

தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவினர் ஜூலை 1-ந் தேதியும், வணிகவியல் பாடப்பிரிவினர் 2-ந் தேதியும், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவை சேர்ந்தவர்கள் 3-ந் தேதியும், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இதர பாடப்பிரிவினர் 4-ந் தேதியும் சமர்ப்பிக்கவேண்டும். அனைத்து பாடப்பிரிவினரும் மேற்கண்ட குறிப்பிட்ட தேதிகளில் காலை 9-30 முதல் மாலை 5-30 மணிவரை சமர்ப்பிக்கலாம்.இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி