Skip to main content

சத்துணவு பொறுப்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை !

அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை கடைபிடிக்காத சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவர், என்று மாவட்ட
நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், 2,383 சத்துணவு கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சத்துணவு சமைக்கும்போது, போதிய கவனமின்மை காரணமாக பல நேரங்களில் மாணவ, மாணவிகள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
அவசியம்
மாவட்டத்தில் உள்ள பல சத்துணவு மையங்கள் போதிய கட்டட வசதியின்றி செயல்படுகின்றன. அரசு திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் புதிய சத்துணவு மைய கட்டடங்கள் கட்டித் தரப்படுகிறது. இருந்தாலும், பல மையங்களில் மரத்தடியில் சத்துணவு சமைக்க வேண்டிய நிலை உள் ளது. இந்த மையங்களில் திறந்த வெளியில் உணவு சமைப்பதால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை.
சுகாதாரமின்மை
சத்துணவு மையங்கள் பலவற்றில் பாதுகாப்பான நிரந்தர கட்டடம் இல்லாததால், பருப்பு வகைகளில் பூச்சி, வண்டுகள் பிடித்து விடுகின்றன. இவற்றை சமைக்கும் முன் நன்கு சுத்தம் செய்து, கழுவாமல் பயன்படுத்துவதால், சத்துணவு உண்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. பல இடங்களில் சத்துணவு சமைக்கும் இடத்தினை தினமும் கழுவி, சுத்தமாக வைத்திருப்பதில்லை. இதனால், பல்லி உள்ளிட்டவை சமையல் செய்யும்போது, தவறுதலாக உணவில் விழுந்து விடுகிறது. பல்லி விழுந்த சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவது, தொடர்கிறது.
மாணவர்கள் பாதிப்பு
சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் பாதிப்பது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. கடந்த 18ம் தேதி, விக்கிரவாண்டி அடுத்த மேல் காரணை அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 166 மாணவ, மாணவிகளுக்கு திடீர் வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மாணவர்கள் அனைவரும் பல்வேறு வாகனங்கள் மூலம் அவசரமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, தேவையான மாணவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தனர். பள்ளி மாணவர்கள் சிகிச்சை முடிந்து, அன்று மாலை மருத்துவமனையிலிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் சிலருக்கு மீண்டும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, நேற்று காலை முண்டிம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மீண்டும் கொண்டு வந்து சேர்த்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், மாலை அனைவரும் வீடு திரும்பினர்.
அதிகாரிகள் அவஸ்தை
மேல்காரணை பள்ளி மாணவர்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கத்தால் பாதித்ததும், அரசுத்துறைகளின் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் மருத்துவமனையில் முகாமிட்டனர். பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி தலைவர் மற்றும் சி.இ.ஓ.,- டி.இ.ஓ., உள்ளிட்ட துறை அதிகாரிகளும் மருத்துவமனைக்கு விரைந்தனர். மாணவ, மாணவிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னரே, அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.
கலெக்டர் எச்சரிக்கை
சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகள் பாதிக்கும் சம்பவத்தை தடுக்கும் வழிமுறைகள் குறித்து, கலெக்டர் தலைலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள 2,383 சத்துணவு மையங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் சமையலர்கள் கலந்து கொண்டனர். இதில், கலெக்டர் சம்பத் பேசுகையில், "" சத்துணவு மையங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகள் இனி நடக்காமல், சத்துணவு மைய பொறுப்பாளர்கள் கவனமுடன் செயல் பட வேண்டும். சத்துணவு பொருட்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என கூறினார். சமைத்த உணவு பாத்திரங்களை மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கும் முன், உணவில் எவ்வித நச்சுத்தன்மையும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மரங்களின் கீழ் மாணவர்களை அமர வைத்து உணவு பரிமாறக் கூடாது. சத்துணவு மையங்களை கண்காணிக்க, ஒன்றிய வாரியாக 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளது. அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை கடைபிடிக்காத சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவர், என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்