சிறப்பு டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஜூலை, 1, 2ம் தேதிகளில், நான்கு மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு டி.இ.டி., தேர்வு (இரண்டாம் தாள்), கடந்த, மே, 21ம் தேதி நடந்தது. இதில், 4,500 பேர் பங்கேற்றனர். 933 பேர்,
தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, வரும், ஜூலை, 1, 2ம் தேதிகளில், மதுரை, திருச்சி, சேலம், விழுப்புரம் ஆகிய நான்கு மண்டலங்களில், குறிப்பிட்ட மையங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியாத மாற்றுத்திறனாளிகள், வேறு நபரை, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுப்பலாம் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி