Skip to main content

இடமாறுதல் கவுன்சலிங்கில் காலியிடங்கள் மறைப்பு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

இடமாறுதல் கவுன்சலிங்கில் காலியிடங்கள் மறைக்கப்பட்டது தொடர்பாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் மற்றும் மேல்நிலைக் கல்வி இணை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
நெல்லையைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வையணன். 2012ம் ஆண்டு முதல் ராமநாதபுரம் டி.எம். கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளியில்
பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு பணி மூப்பு அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 2012-13ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில்ஏற்பட்ட 3 காலி பணியிடங்களில் ஒன்றில் பணி நியமனம் கோரி விண்ணப்பித்தார். ஆனால் கலந்தாய்வில் காலி பணியிடம் காட்டப்படவில்லை. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வையணன் வழக்கு தொடர்ந்தார்.

அப்போது அளிக்கப்பட்ட தீர்ப்பில், இனி வரும் காலங்களில் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தவும், விதிமுறைகளின்படி ஆசிரியர் வையணன் விண்ணப்பத்தை பரிசீலித்து இடமாற்றம் வழங்கவும் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு நடந்த கலந்தாய்விலும் காலியிடங்கள் மறைக்கப்பட்டதால், ஐகோர்ட்டில் வையணன் மீண்டும் வழக்கு தொடர்ந் தார். இந்த மனுவை கடந்த 23ம் தேதி விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஹரிபரந்தாமன், ‘’ ஜூன் 24ம் தேதி நடைபெறும் கலந்தாய்வை வெளிப்படையாகநடத்தி மனுதாரரின் விருப்பத்தை பரீசீலிக்க வேண்டும்‘ என்று உத்தரவிட்டார்.இதன் அடிப்படையில் கடந்த 24ம் தேதி ராமநாதபுரத்தில் நடந்த கலந்தாய்வில் வையணன் பங்கேற்றார். ஆனால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பணியிடங்கள் மறைக்கப்பட்டதால், வையணனுக்கு மாறுதல் கிடைக்கவில்லை. இதனால் நீதிமன்ற உத்தரவை கல்வித் துறை அவமதித்துள்ளதாக கூறி கடந்த 25ம் தேதி சென்னைஐகார்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன், கலந்தாய்வில் மறைக்கப்பட்டதாக கூறப்படும் 3 இடங்களில் தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்காததால் மேற்கண்ட 3 இடங்களையும் நிரப்புவதை மறுஉத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், இது தொடர்பாக பள்ளிக் கல்விஇயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல் நிலைக்கல்வி) ஆகியோர் 2வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்