Skip to main content

பென்சனர்கள் கவனத்துக்கு...

பொதுத்துறை வங்கி திட்டத்தில் ஓய்வூதியம் விவரங்கள் 30க்குள் அளிக்க வேண்டும்

பொதுத்துறை வங்கி திட்டம் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளதால் அதற்கான விவரங்கள் வரும் 30ம் தேதிக்குள் அளிக்கவேண்டு என பென்சனர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1ம் தேதி முதல் ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்-2014 நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்காக ஓய்வூதியதாரர்கள்,
குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்கள் விவரங்களை உரிய படிவத்தில் வரும் 30ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இப்படிவங்களை தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிக் கிளைகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.  இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பொதுத்துறை வங்கித் திட்டம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் (ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் தவிர) பூர்த்தி செய்த படிவங்களை புகைப்படம் (துணைவருடன் உள்ள கூட்டுப் புகைப்படம்) மற்றும் துணைவரின் பிறந்த தேதிக்கான ஆவண நகலுடன் தொடர்புடைய வங்கி கிளைகளில் நேரடியாகவோ அல்லது பிற நபர் மூலமாகவோ அளிக்க வேண்டும். சரிபார்த்தலுக்கு பின்னர் படிவத்தின் நகலை வங்கி அலுவலரின் கையொப்பத்துடன் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு திருச்சி கருவூல அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி