தமிழகத்தில் அனைத்து பள்ளி கட்டிடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஜூன் 30ம் தேதிக்குள் அமைக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவுரைகளும்
தொடக்க கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு தொடர்பாக சென்னையில் நடந்த கூட்டத்தில் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பயிற்சியாளர்கள் பள்ளிதோறும் சென்று ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு ஆய்வுக்கு அதிகாரிகள் வரும்போது தலைமை ஆசிரியர்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி