Skip to main content

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்

திருவாரூர் மாவட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, இன்று துவங்குகிறது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாந்தரையன் வெளியிட்ட அறிக்கை:
திருவாரூர் மாவட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்
மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு முகாம் இன்று (17ம் தேதி) துவங்கி வரும், 28ம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்ட தொடக்க கல்வித் துறைக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, திருவாரூர் கந்தப்ப மட தெருவில் உள்ள ஆர்.சி. பாத்திமா உயர்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இன்று, (17ம் தேதி) காலை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொது மாறுதலும், பிற்பகல் பதவி உயர்வு குறித்த கலந்தாய்வும் நடைபெறுகிறது. நாளை (18ம் தேதி) காலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வும், பிற்பகல் ஒன்றியத்திற்குள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறுகிறது. வரும், 19ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வும், 21ம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடைபெறுகிறது.
வரும், 23ம் தேதி காலை தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வும், பிற்பகல் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறுகிறது. 24ம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு, 25ம் தேதி ஒன்றியத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு, 26ம் தேதி மாவட்டத்திற்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் கலந்தாய்வு, 28ம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி