Skip to main content

டைப்பிஸ்டுகளுக்கு 5% சம்பள உயர்வு.

அரசுத்துறையில் பணியாற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட்டுகளுக்கு தனி ஊதியம் 5 சதவீதம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: 
உயர் நீதி மன்றம் வழங்கிய பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையில் தமிழக
அரசு மற்றும் நீதிமன்றங்களில் பணியாற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட்டுகள் கிரேடு- 3 ( 1.8.92 முதல் 1.9.98 வரை பணியில் சேர்ந்தவர்கள்) தனி ஊதியத்தில்5 சதவீதம் உயர்த்தப்படுகிறது.இதையடுத்து அனைத்து துறைத் தலைவர்களும் மேற்கண்ட டைப்பிஸ்டுகளுக்கு 5 சதவீத அடிப்படை சம்பளத்தை தனி ஊதியமாக உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த 5 சதவீத உயர்வு என்பது மேற்கண்ட டைப்பிஸ்டுகள் அதே பணியில் நீடிக்கும் வரையில் தொடரும்.

டைப்பிஸ்ட் பணியில் இருந்து மேற்கண்ட நபர்கள் பதவி உயர்வு பெற்று உயர் பதவிக்கு செல்லும் போது இந்த தனி ஊதியம் கிடைக்காது. இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி