Skip to main content

500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு- தினமணி

பட்டதாரி ஆசிரியர்கள் 500 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக ஆன்-லைன் மூலம் புதன்கிழமை (ஜூன் 25) பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
தகுதி வாய்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் இந்த
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள ஆயிரம் பேரிலிருந்து 500 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படும். இவர்களுக்கான பதவி உயர்வு ஆணைகளும் புதன்கிழமையே வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமும், 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும் நேரடியாக நிரப்பப்படும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி