Skip to main content

இன்று ஜூன் 28

நிகழ்வுகள்

1389 - ஒட்டோமான் மற்றும் செர்பியப் படைகள் கொசோவோவில் போரை ஆரம்பித்தன. இப்போர் ஒட்டோமான் இராணுவத்தினர் தென்கிழக்கு ஐரோப்பாவைக் கைப்பற்ற உதவியது.

1519 - ஐந்தாம் சார்ல்ஸ் புனித ரோமப் பேரரசின் மன்னனானான்.

1651 - 17ம் நூற்றண்டின் மிகப் பெரும் போர் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஆரம்பமானது.

1763 - ஹங்கேரியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1776 - ஜார்ஜ் வாஷிங்டனை கடத்தத் திட்டமிட்டதற்காக அவரது மெய்ப்பாதுகாப்பாளராக இருந்த "தொமஸ் ஹின்க்கி" தூக்கிலிடப்பட்டான்.

1880 - அவுஸ்திரேலியாவின் காட்டுக் கொள்ளைக்காரன் நெட் கெலி பிடிபட்டான்.

1881 - ஆஸ்திரியாவும் சேர்பியாவும் இரகாசிய உடன்பாட்டை எட்டின.

1904 - "நோர்ஜ்" என்ற டென்மார்க் நாட்டுப் பயணிகள் கப்பல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சிறி திட்டு ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 635 பேர் கொல்லப்பட்டனர்.

1914 - ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், மற்றும் அவனது மனைவி சோஃபி இருவரும் சேர்பியாவில் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணியாக அமைந்தது.

1919 - முதலாம் உலகப் போர்: பாரிசில் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.

1922 - ஐரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1940 - சோவியத் ஒன்றியம் பெசராபியாவை ருமேனியாவிடம் இருந்து கைப்பற்றியது.

1950 - வட கொரியா சியோலைக் கைப்பற்றியது.

1964 - மால்க்கம் எக்ஸ் ஆபிரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்.

1967 - கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

1994 - ஓம் ஷின்றிக்கியோ என்ற மதவழிபாட்டுக் குழுவினர் ஜப்பானில் மட்சுமோட்டோ என்ற இடத்தில் நச்சு வாயுவைப் பரவச் செய்ததில் 7 பேர் கொல்லப்பட்டு 660 பேர் காயமடைந்தனர்.

1995 - மண்டைதீவுத் தாக்குதல், 1995: மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர்.

2004 - ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா ஈராக்கியர்களிடம் ஒப்படைத்தது.

பிறப்புகள்

1703 - ஜோன் வெஸ்லி, மெதடிசத்தை அறிமுகப்படுத்தியவர். (இ. 1791)

1907 - தாவீது அடிகள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர் (இ. 1981)

1921 - பி. வி. நரசிம்ம ராவ், இந்தியாவின் 9வது பிரதமர் (இ. 2004)

1937 - எஸ். எஸ். கணேசபிள்ளை, வானொலி, மேடை நடிகர் (இ. 1995

1940 - முகமது யூனுஸ், வங்காள தேசத்தைச் சேர்ந்த பொருளியலாளர், நோபல் பரிசு பெற்றவர்.

1940 - கர்பால் சிங், மலேசிய வழக்கறிஞர், அரசியல்வாதி (இ. 2014)

இறப்புகள்

1836 - ஜேம்ஸ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர் (பி. 1751)

1914 - பிரான்ஸ் பேர்டினண்ட், ஆஸ்திரிய இளவரசர் (பி. 1863)

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா