Skip to main content

ஆசிரியர் பயிற்சி படிப்பு: ஜூலை 15ல் கலந்தாய்வு

ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, 4,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு, ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், சுயநிதி தனியார் பள்ளிகள் என, 538 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், அரசு பள்ளிகளில், 4,860 இடங்களும், தனியார்
பள்ளிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 10 ஆயிரம் இடங்களும் உள்ளன. இவ்வளவு இடங்கள் இருந்தும், 4,535 மாணவர்கள் மட்டுமே, ஆசிரியர் பயிற்சியில் சேர விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு, ஆன்லைன் முறையில், வரும் ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது. விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவ, மாணவியரும், அரசு பள்ளிகளிலேயே சேர வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, கலந்தாய்வு மற்றும் தனியார் பள்ளிகளில் நேரடி சேர்க்கை என, 9,971 பேர் சேர்ந்தனர். இந்த ஆண்டும், இதே அளவிற்கு, மாணவர் சேர்க்கை இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி