பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு, நேற்று துவங்கியது. பொதுத் தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவ, மாணவியர், சம்பந்தப்பட்ட பாடங்களில், மீண்டும் தேர்வெழுதி, நடப்பு கல்வி ஆண்டிலேயே, உயர்கல்வியைத் தொடர வேண்டும் என்பதற்காக, உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 10ம் வகுப்பு
பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான உடனடி தேர்வு, மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது. 200க்கும் மேற்பட்ட மையங்களில் நடக்கும் தேர்வில், 80 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கின்றனர். வரும், 30ம் தேதி வரை, தேர்வு நடக்கிறது. கடந்த, 18ம் தேதி துவங்கிய பிளஸ் 2 உடனடி தேர்வும், வரும், 30ம் தேதி வரை நடக்கிறது. இதை, 50 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். இரு தேர்வுகளின் முடிவுகளும், ஜூலை, 20ம் தேதிக்குள் வெளியாகும்.Teachers lesson plan,Students corner,Educational activities,classroom management,morning prayer activities