Skip to main content

TET: ஜூன் 10ல் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு விடுபட்டவர்களுக்கு ஜூன் 10ல் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தேர்வு வாரி யம் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்கான விடைகள் கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மாவட்டம் வாரியாக நடைபெற்றது. இதுவரை சான்றிதழ்
சரிபார்ப்பில் பங்கேற்கா மல் விடுபட்டவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஜூன் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் ஆகிய 4 மையங்களில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு கடிதம் மற்றும் பயோடேட்டா போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மதுரை ஒசிபிஎம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது. இதனை போன்று ஜெயராணி பெண்கள் மேல்நிலை பள்ளி சேலம், பிஷப் ஹெர்பர் மேல்நிலை பள்ளி புதூர்& திருச்சி, காமராஜ் முனிசிபல் ஆண்கள் மேல்நிலை பள்ளி விழுப்புரம் ஆகிய இடங்களிலும் அந்தந்த பகுதி மாவட்டங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. இதற்காக தனியே அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைக்கப்படமாட்டாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

10ம் வகுப்பு துணைத்தேர்வு தக்கலில் விண்ணப்பிக்க ஏற்பாடு

கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்காக ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. கடைசி நாள் வரை விண்ணப்பிக்காதவர்கள்