Skip to main content

மைக்ரோசாப் விடையளிக்க முடியா கணினி புதிர்கள்

1. CON என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கிப் பாருங்கள். விண்டோஸ் ஏற்றுக் கொள்ளாது. ஏன்? என்ன காரணம்? அது சிஸ்டத்தில்
பயன்படுத்தப்படும் சொல் என்பதாலா? மைக்ரோசாப்ட் அலுவலர்களால் உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை.

2. விண்டோஸ் பயன்படுத்துகிறீர்களா! அதனுடன் சிஸ்டம் புரோகிராமாகத் தரப்பட்டிருக்கும் நோட்பேட் புரோகிராமினைத் திறக்கவும். அதில் “Bush hid the
facts” என்று (மேற்கோள் குறிகள் இல்லாமல்) டைப் செய்திடவும். பின் அந்த பைலை ஏதேனும் ஒரு பெயரில் சேவ் செய்திடவும். பின்னர் இந்த பைலை மீண்டும் திறந்து பார்க்கவும். இப்போது நீங்கள் டைப் செய்த டெக்ஸ்ட்டைப் படிக்க முடிகிறதா? இல்லை என்றால் காரணத்தைச் சொல்லுங்கள்.

3. மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பினைத் திறந்து கொள்ளுங்கள். பின் முதல் வரியில் =rand (10, 9) என டைப் செய்திடவும். இந்த வரியை டைப் செய்து என்டர் தட்டி கீழே வரவும். என்ன நடக்கிறது அங்கே? என்று பார்க்கவும்.

டேபிளில் பேக் ஸ்பேஸ் / டெலீட் கீகள்

வேர்டில் அட்டவணை ஒன்றைத் தயாரித்துள்ளீர்கள். இதில் செல்கள், நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசைகளை முற்றிலுமாக அழிக்க என்ன செய்கிறீர்கள்? அழிக்க வேண்டியதைத் தேர்ந்தெடுத்த பின்னர் டெலீட் கீயினை அழுத்துகிறீர்களா? என்ன நடக்கிறது? அழிய மறுக்கிறதா? இதற்குத்தான் மெனு வழி இருக்கிறதே. டேபிள் தேர்ந்தெடுத்து எந்த வகை வரிசையோ அதனைத் தேர்ந்தெடுத்து டெலீட் கொடுத்தால்தான் அழிந்துவிடுமே என்று நீங்கள் எண்ணுவது தெரிகிறது. ஆனால் இத்தனை படிகள் தாண்டவேண்டுமே என இன்னொருவர் கூறுவதும் கேட்கிறது. இதற்கு மாற்று கீயாக (மருந்தாக) இன்னொரு கீ உள்ளது. அதுதான் பேக் ஸ்பேஸ் கீ. தேவையான வரிசைகளைத் தேர்ந்தெடுத்து பேக் ஸ்பேஸ் கீ அழுத்தினால் வரிசைகள் நீக்கப்படும். டேட்டா முதற்கொண்டு அனைத்தும் அழிந்துவிடும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா