Skip to main content

மதிப்பெண் சான்றிதழ்களை ”லேமினேசன்” செய்ய வேண்டாம்

மதிப்பெண் சான்றிதழ்களை ”லேமினேசன்” செய்ய வேண்டாம்: அரசு தேர்வுகள் இயக்குநர் வேண்டுகோள்

அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:அரசு தேர்வுகள் துறையால் வழங்கப்படும் மதிப்பெண்
சான்றிதழ்களை மாணவர்கள் ”லேமினேசன்”  செய்வதாக தெரியவருகிறது.”லேமினேசன்” செய்யும்பொழுது சான்றிதழ்கள் பழுதடைய நேரிடுகிறது. மேலும் மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி, பெயர் மாற்றம் திருத்தம் செய்ய நேரிடும் போது ”லேமினேசன்” செய்திருந்தால் திருத்தம் செய்வது கடினமாக உள்ளது.

வெளிநாடு செல்லும் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் பின்புறம் அரசு முத்திரை வைக்கும்போது லேமினேசனில் இருந்து சான்றிதழை பிரிக்கும் போது சான்றிதழ் சிதைய நேரிடுகிறது. எனவே, மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் ”லேமினேசன்”  செய்ய வேண்டாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்