Skip to main content

நோக்கியா சென்னை தொழிற்சாலை மூடப்படும்

கோடிக்கணக்கான எண்ணிக்கையில் மொபைல் போன்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட, சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் நோக்கியாவின் தொழிற்சாலை மூடப்படும் நிலையை அடைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலகப்
பணியாளர்களில் 85 சதவீதம் பேர், தன் விருப்ப ஓய்வில் செல்ல விருப்பம் தெரிவித்து எழுதிக் கொடுத்துள்ளனர்.
ரூ.3,000 கோடி அளவில் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக, சென்னை உயர்நீதி மன்றம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து பல பிரச்னைகளை இந்த தொழிற்சாலை சந்தித்தது. பல ஊழியர்கள் காலவரையற்ற விடுமுறையில் சென்றனர். தொழிற்சாலையில் போன் தயாரிக்கப்படுவது ஏறத்தாழ நின்றுவிட்டது. மொத்த தொழிற்சாலை கட்டமைப்பும் தள்ளாடத் தொடங்கியது. தொழிலாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். நிர்வாகத்தில் இருந்தவர்களும் எதை நோக்கி செல்வது என அறியாமல் இருந்தனர். இதில் நீதிமன்றத்தில் வழக்கினைச் சந்திப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. நோக்கியா நிர்வாகம் தன் அனைத்து ஊழியர்களுக்கும் தானாக முன்வந்து பணி ஓய்வு பெறும் திட்டத்தினை வழங்கியபோது, ஏறத்தாழ 5,000 முதல் 7,500 தொழிலாளர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். 
2006 ஆம் ஆண்டு முதல் சென்னை ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை இயங்கத் தொடங்கியது. அண்மையில் வெளியான ஆஷா வரிசை போன்கள் உட்பட, அனைத்து மாடல் போன்களும் இங்கு தயார் செய்யப்பட்டன. இங்கு தயாராகும் அனைத்தும், இங்கிருந்து ஏற்றுமதி மட்டுமே செய்யப்பட வேண்டும் என்ற ஒப்பந்தக் கட்டுப்பாட்டினை மீறி, நோக்கியா உள்நாட்டில் தன் போன்களை விற்பனை செய்ததாக அரசு குற்றம் சாட்டியது. இதனை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து இயங்கியதால், பிரச்னை பெரிய அளவில் சென்றது. 
இந்த பிரச்னை, நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்குவதில் தாமதத்தையோ, சிக்கலையோ ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. இறுதியில் சென்ற ஏப்ரல் 24ல், முழுமையாக தொழிற்சாலை மைக்ரோசாப்ட் வசம் சென்றது. தற்போதைக்கு, அதனை நெடுங்கால குத்தகை அடிப்படையில், மைக்ரோசாப்ட் ஏற்றுள்ளது. வியட்நாம் நாட்டில், மிகப் பெரிய அளவில் தொழிற்சாலை ஒன்றை அமைத்து இயக்குவதால், நோக்கியாவிற்கு, சென்னை தொழிற்சாலை மூடப்படுவது பாதிப்பினை உண்டாக் காது. 
சென்னை ஏற்றுமதி வளாகச் சலுகைகளுக்கான காலம் முடிந்த பின்னர், நோக்கியா இந்த தொழிற்சாலையில் அதிக கவனம் செலுத்தவில்லை. தற்போது இதில் இருந்து விலக்கப்படும் தொழிலாளர்களுக்கு, நோக்கியா வழங்கும் கொடைகள் நல்லவிதமாக இருப்பதால், தொழிலாளிகள் அவற்றை ஏற்றுக் கொண்டு விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு