Skip to main content

பள்ளிச் சான்றிதழில் ஒரு தேதியும், உண்மையான பிறந்த தேதி வேறொன்றா...

பெரும்பாலானோரின் பள்ளிச் சான்றிதழில் ஒரு தேதியும், உண்மையான பிறந்த தேதி வேறொன்றாகவும் இருப்பது கண்கூடு.

இதற்காக பள்ளிச் சான்றிதழில் உள்ள தேதிப்படி புதிய பதிவை உருவாக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.

போலிகளைத் தவிர்ப்பதற்காக திருச்சி மாநகராட்சி மூலம் பிறப்புப் பதிவில்லாச் சான்று பெறுவதற்கான வழிமுறைகளை மாநகராட்சி ஆணையர்
வே.ப. தண்டபாணி அறிவித்துள்ளார்.

தவறான முறையில் போலியாக இச்சான்றுகளைப் பெற்றது பிற்காலத்தில் தெரியவந்தால் அந்தப் பதிவுகள் நீக்கப்படுவதுடன், சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

1989-க்குப் பிறகு பிறந்த அத்தனைக் குழந்தைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துவிட்டதைத் தொடர்ந்து, பாஸ்போர்ட் உள்ளிட்ட தற்போதைய அனைத்துத் தேவைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் அவசியமாகிவிட்டது.

ஆனால், பெரும்பாலானோரின் பள்ளிச் சான்றிதழில் ஒரு தேதியும், உண்மையான பிறந்த தேதி வேறொன்றாகவும் இருப்பது கண்கூடு.

இதற்காக பள்ளிச் சான்றிதழில் உள்ள தேதிப்படி புதிய பதிவை உருவாக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. அதேபோல, தத்தெடுத்த குழந்தைகளுக்கு ஏற்கெனவே பதியவில்லை என்று கூறி புதிய பதிவை உருவாக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. இவற்றால் இரு பதிவுகள் ஏற்பட்டுவிடுகின்றன.

இதைத் தவிர்க்கும் வகையில் பதிவில்லாச் சான்று மற்றும் தத்தெடுக்கும் நடைமுறைகளை கறாராக கடைப்பிடிக்கவும் மாநகராட்சி வழிமுறைகளை அறிவித்துள்ளது.

இதன்படி, பிறப்பு நிகழ்ந்தபோது குடியிருந்த இடத்துக்கான இருப்பிடச் சான்று, பிறப்பு நிகழ்ந்த இடத்துக்கான ஆதாரச் சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும். அத்துடன், பள்ளிச் சான்று, குடும்ப அட்டை போன்றவை சார்புச் சான்றிதழ்களாகவே ஏற்கப்படும்.

மற்ற குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள், முன்பு படித்த பள்ளியில் இருந்து சான்றிதழ் போன்றவற்றை விசாரணைக்கு வழங்கலாம். தத்தெடுத்த குழந்தையாக இருந்தால் முறைப்படி பத்திரத்தில் பதிவு செய்து நீதிமன்ற ஆணை பெற்று அவற்றை சமர்ப்பித்தால் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

பதிவில்லாச் சான்று கோருவதற்கான உண்மையான காரணத்தைக் குறிப்பிட வேண்டும். ஏற்கெனவே பதிவாகியிருந்து போலியாக பதிவில்லாச் சான்று கோருவது சட்டப்படி குற்றம். பிற்காலத்தில் இது தெரியவருமானால் அந்தப் பதிவு நீக்கம் செய்யப்படுவதுடன், குற்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைமுறைச் சிக்கல்கள்

சில பத்தாண்டுகளுக்கு முன்பு குடியிருந்த வீட்டுக்கான ஆதாரங்களைப் பெறுவது அவ்வளவு சுலபமில்லை என்கிறார் வழக்குரைஞர் அ. கமருதீன்.

நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்து சாட்சிக் கூண்டிலேறி ஒப்புதல் தெரிவிப்பதே எதிர்காலத்தில் தவறு என்றால் குற்ற நடவடிக்கைக்கு உள்படுவதாகத்தான் அர்த்தம் என்னும்போது, பதிவில்லாச் சான்று வழங்குவதற்கு இத்தனை கெடுபிடிகள் தேவையற்றது என்றும் அவர் கூறுகிறார்.

ஜாதகம், கிராம நிர்வாக அலுவலர் சான்று, அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகள் இருவரிடம் உறுதிச் சான்று போன்றவற்றையும் கேட்கின்றனர் என்றார் கமருதீன்.

இவற்றைத் தாண்டி, எல்லாச் சான்றுகளையும் இணைத்து விண்ணப்பித்த பிறகு மாநகராட்சி அலுவலகத்தில் அந்த விண்ணப்பம் காணாமல் போய்விடுவதும், நீதிமன்ற ஆணைகளும் சேர்ந்து காணாமல் போய்விடுவதும் நடந்திருக்கிறது.

இவை குறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் மாரியப்பனிடம் கேட்டபோது அவர் கூறியது:

இந்தியத் தலைமைப் பதிவாளரின் 2007 ஜன. 31ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையின்படி இருப்பிடச் சான்று, ஆதாரச் சான்று அவசியம். விஏஓ சான்று, அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின் உறுதிச் சான்று, ஜாதகம் போன்றவற்றை அண்மைக்காலமாகக் கேட்பதில்லை.

கொடுத்துள்ள ஆவணங்கள் எங்களுக்கு போதுமானதாக இல்லையெனில் சட்டப்படி காவல்துறை விசாரணைக்கு வழங்கிவிடுவோம். இதனால் ஏற்படும் காலதாமதம் தவிர்க்க முடியாததுதான்.

விண்ணப்பங்கள், ஆவணங்களைப் பாதுகாத்து வைக்க தனி அலுவலர்களை நியமித்து பணியாற்றி வருகிறோம் என்றார் மாரியப்பன்

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன