Skip to main content

கடலோரக் காவல் படையில் வேலை

கடலோர எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு உயிருக்கும் உடமைக்கும் உத்திரவாதம் தருவதெற்கென்று இந்திய கடலோரக் காவல் படை எனப்படும் இந்தியன் கோஸ்ட் கார்டு படை 1977ல் நிறுவப்பட்டது. இந்தப் படையில் தற்போது கெசடடு ஆபிசர் பிரிவிலான துணை கமாண்டெண்ட் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகள்: கடலோரக் காவல் படையின் அஸிஸ்டெண்ட் கமாண்டெண்ட் பிரிவில் ஜெனரல் டியூடி (ஆண்), ஜெனரல் டியூடி பைலட், நேவிகேட்டர், அப்சர்வர் (ஆண் ), டெக்னிகல் பிராஞ்ச் - மெக்கானிகல் அண்டு எலக்ட்ரிகல் (ஆண்) ஆகிய பிரிவுகளிலும், ஷார்ட் சர்வீஸ் கமிஷன் அடிப்படையில் பைலட்ஸ் - ஹெலிகாப்டர் அண்டு பிக்சடு விங் - இருபாலர், ஜெனரல் டியூடி (மகளிர்) ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது: அஸிஸ்டெண்ட் கமாண்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.1990க்கு பின்னரும் 30.06.1994க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும். ஷார்ட் சர்வீஸ் கமிஷன் அடிப்படையிலான பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.1990க்கு பின்னரும், 30.06.1996க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: அஸிஸ்டெண்ட் கமாண்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்பியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட இள நிலை அறிவியல் பட்டப்படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இதே பிரிவின் டெக்னிகல் பிராஞ்சுக்கு விண்ணப்பிக்க இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்பு தேவைப்படும். ஷார்ட் சர்வீஸ் கமிஷன் பதவிக்கு விண்ணப்பிக்க ப்ளஸ்டூ அளவிலான கல்வித் தகுதியுடன் இத்துறை சார்ந்த லைசென்ஸ் பெற்றிருப்பதும் தேவையாகும்.
உடல் தகுதி: பாதுகாப்புப் படை சார்ந்த பதவி என்பதால் மேற்கண்ட பதவிகளுக்கு சில குறைந்த பட்ச உடல் தகுதிகள் கட்டாயம் தேவை. விபரங்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் போன்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 05.06.2014
இணையதள முகவரி: <http://www.joinindiancoastguard.gov.in/PDF/Advertisement/OFFICER115.pdf>

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்