Skip to main content

தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு“

“தஞ்சை வீணைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது,” என, அறிவிசார் சொத்துரிமை சங்க தலைவர் சஞ்சய்காந்தி கூறினார். 
கர்நாடக இசை உலகில் உன்னதமான இடத்தைப்பெற்றது தஞ்சாவூர் வீணை. தஞ்சையில் 17ம் நுற்றாண்டில் ரகுநாத மன்னர் ஆட்சி காலத்தில் புதிய முறையில் வீணை தயார் செய்யப்பட்டது.இதனால், தஞ்சாவூர் வீணை
என்றும், ரகு நாதவீணை என்றும் பெயர் பெற்றது. 40 ஆண்டு விளைந்த பலா மரத்தின் அடி மரத்தில் இருந்து வீணை செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த, தஞ்சாவூர் வீணைக்கு, புவிசார் குறியீடு பெறப்பட்டுஉள்ளது.தஞ்சாவூரில் அறிவுசார் சொத்துரிமை பேரவை தலைவர் சஞ்சய்காந்தி கூறியதாவது. கலைஞர்களையும், பாரம்பரிய கலையையும் பாதுகாக்கத்தான், அரசுஇந்த புவிசார் குறியீட்டை வழங்குகிறது.

அதன்படி, தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. துவக்கத்தில் ஒவ்வொரு ராகங்களுக்கும்ஒரு வீணை பயன்படுத்தப்பட்டு வந்தது. பின், 17ம் நூற்றாண்டில், தஞ்சைஆண்ட ரகுநாத மன்னர் ஆட்சியின் போது, அனைத்து ராகங்களும் இசைக்க கூடிய வகையில் ஒரு வீணை தயாரிக்கப்பட்டது. தற்போது, நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள், தஞ்சாவூர் வீணை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், பல்வேறு கைவினை மற்றும் பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தஞ்சை நெல் மாலை, தஞ்சை சீரகசம்பா, கும்பகோணம் வெற்றிலை, திருபுவனம் பட்டு, திருவையாறு அசோக அல்வா, தஞ்சை மரக்குதிரை, தஞ்சை ஓவியம் ஆகியவற்றுக்கும்புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா