Skip to main content

முழுமையான புரோகிராம் நீக்கம்

பெர்சனல் கம்ப்யூட்டரில் பதியப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம் இனி தேவைப்படாது என நாம் உணரும் பட்சத்தில், அதனை அன் இன்ஸ்டால் செய்வதே நல்லது. 

இவ்வாறு அன் இன்ஸ்டால் செய்திடுகையில், அதனுடன் இணைந்த பல சிறிய பைல்கள் நம் கம்ப்யூட்டரிலேயே ஒட்டிக் கொண்டு ஹார்ட் டிஸ்க்கின்
இடத்தை எடுத்துக் கொள்கின்றன. நாளடைவில் இவையே குறிப்பிட்ட அளவில் நம் டிஸ்க் இடத்தை அடைத்துக் கொள்கின்றன. 

இடம் எடுத்துக் கொள்வது மட்டுமின்றி, சில வேளைகளில், இவை மற்ற புரோகிராம்களின் செயல்பாட்டில் குறுக்கிடுகின்றன. இவை குறுக்கிடுவது நமக்குத் தெரிய வராததால், நாம் குழப்பம் அடைகிறோம். நம் பணி நேரம் வீணாகிறது. 

பெரும்பாலான புரோகிராம் நீக்கங்களில் இது ஏற்படுகிறது. இந்தத் தொல்லையின்றி, முழுமையாக புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திட நமக்கு இலவசமாக ஒரு புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. டோட்டல் இன்ஸ்டால் என்னும் இந்த புரோகிராம், முழுமையான முறையில் மிகச் சிறப்பான தொழில் நுட்பத்துடன் செயல்படுவதனைக் காண முடிகிறது.

டோட்டால் அன் இன்ஸ்டால் புரோகிராம், இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களைத் துல்லிதமாக முதலில் ஆய்வு செய்கிறது. இதன் மூலம் இன்ஸ்டலேஷன் டேக் ஒன்றைத் தயார் செய்கிறது. பின்னர், இதனைப் பயன்படுத்தி, முழுமையாக புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்கிறது. 

ஒரு அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்திடும் முன், டோட்டல் அன் இன்ஸ்டால் புரோகிராம், சிஸ்டம் முழுவதையும் ஒரு ஸ்நாப்ஷாட் எடுத்துக் கொள்கிறது. அதே போல, புரோகிராம் இன்ஸ்டால் ஆனவுடன், மீண்டும் ஒரு ஸ்நாப் ஷாட் எடுக்கிறது. பின்னர், இரண்டு ஸ்நாப் ஷாட்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, சிஸ்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒரு கிராபிகல் காட்சியாகக் காட்டுகிறது. இதில் ரெஜிஸ்ட்ரி மாற்றங்கள், இணைக்கப்பட்ட, மாற்றப்பட்ட, நீக்கப்பட்ட பைல்கள் காட்டப்படுகின்றன. இந்த மாற்றங்களை டோட்டல் அன் இன்ஸ்டால் சேவ் செய்து வைத்துக் கொள்கிறது. நீங்கள் குறிப்பிட்ட அப்ளிகேஷன் புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திடக் கட்டளை கொடுத்தவுடன், அந்த புரோகிராம் இன்ஸ்டால் செய்வதற்கு முன் இருந்த நிலைக்குக் கம்ப்யூட்டர் சிஸ்டத்தினை அமைக்கிறது. 

இதன் சிறப்பம்சங்களாகச் சிலவற்றை இங்கு குறிப்பிடலாம்.

1. இன்ஸ்டால் செய்திடுகையில் ரெஜிஸ்ட்ரி மற்றும் பைல் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்தல்.

2. கண்காணிப்புக்குள்ளான புரோகிராம்கள் அன் இன்ஸ்டால் செய்யப்படுகையில், முழுமையான அன் இன்ஸ்டால் பணி மேற்கொள்ளப்படுகிறது. 

3. கண்டறியப்பட்ட மாற்றங்களில், குறிப்பிட்ட சிலவற்றைத் தேடி அறிந்து பதிவு செய்கிறது. 

4.ரெஜிஸ்ட்ரி மாற்றங்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்திடப் பயன்படுத்துகிறது.

5. ரீ பூட் செய்திடாமலேயே, மறு பெயர் சூட்டப்பட்ட பைல்களைக் காட்டுகிறது. 

6. கண்டறியப்பட்ட மாற்றங்கள் குறித்த புள்ளி விபரங்களைக் காட்டுகிறது. 

7. கண்டறியப்பட்ட மாற்றங்களை, பயனாளர் விரும்பும் மாற்றங்களை வைத்துக் கொள்கிறது.

8. பயனாளர்களே விரும்பும் வகையில், மாற்றங்களை அமைக்க உதவுகிறது.

டோட்டல் அன் இன்ஸ்டால் புரோகிராமினை இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் பெறலாம். செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://www.martau.com/

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு