Skip to main content

லேப்டாப் பேட்டரியை பராமரிப்பது எப்படி

லேப்டாப்புகள் வந்த பிறகு மேசை கணினிகளின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. அந்த அளவிற்கு லேப்டாப்புகள் மக்களின் மத்தியில் 
பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த லேப்டாப்புகள் சிறப்பாக இயங்க
வேண்டும் என்றால் அதன் பேட்டரி மிகுந்த சக்தியுடன் இருக்க வேண்டும். லேப்டாப்புகளின் பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது? என்பதற்கான சில வழிமுறைகளை இங்கே காணலாம்.

அதிக பேட்டரி பேக்கப்புக்கு : லேப்டாப்பின் திரைக்குதான் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே கரண்ட் இல்லாமல் பேட்டரியில் லேப்டாப்பை இயக்கும்போது அதன் திரையின் பிரகாசத்தை குறைத்து வைத்துக்கொள்வது அதிக மின்சாரத்தை சேமிக்க முடியும். அதுபோல் லேப்டாப் ஸ்டான்பை மோடில் வைத்திருக்கும்போது, ப்ளூடூத் மற்றும் வைபை போன்ற இணைப்புகள் மற்றும் யுஎஸ்பி ப்ளாஷ் ட்ரைவ்கள் போன்ற இணைப்புகளை துண்டித்துவிடுவது நல்லது. மின் சிக்கனம் மட்டுமின்றி பேட்டரியின் ஆயுள் காலமும் அதிகரிக்கும்.

எப்போது சார்ஜ் செய்ய வேண்டும் : நீண்ட நேரம் தொடர்ந்து லேப்டாப்பின் பேட்டரியை சார்ஜில் வைக்கக் கூடாது. குறிப்பாக பேட்டரி 15%க்கும் குறைவான சார்ஜ் இருக்கும் போது மட்டும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். குறிப்பாக பேட்டரி முழு சார்ஜில் இருக்கும் போது அதை மீண்டும் சார்ஜில் வைத்தால் பேட்டரி மிக விரைவாக பலவீனமாகிவிடும்.

சார்ஜ் ஆகும்போது பேட்டரியை பொசுக்குன்னு கழற்றாதீங்க : லேப்டாப் மின் இணைப்பில் இருக்கும் போது அதன் பேட்டரியை அகற்ற வேண்டாம். அதுபோல் பேட்டரி இல்லாமல் நீண்ட நேரம் லேப்டாப்பை மின் இணைப்பில் வைத்து இயக்க வேண்டாம். பேட்டரியை ரிசார்ஜ் செய்வது நல்லது.

பேட்டரியை மிதமான தட்பவெப்ப நிலையில் வைத்திருத்தல் : ஒரு வாரத்துக்கு மேல் லேப்டாப்பில் வேலை இல்லை என்று தெரிந்தால் அல்லது துணை பேட்டரி இருந்தால் பேட்டரியின் சார்ஜ் அளவை 50%க்கும் குறைவாக வைத்து அதை மிதமான தட்பவெப்ப நிலையில் வைத்திருப்பது நல்லது. அதுபோல் லேப்டாப்பை நீண்ட நேரம் காரில் வைத்திருக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் அதிக நேரம் லைப்டாப்பை காரில் வைத்திருந்தால் விரைவில் லேப்டாப் சூடாகிவிடும்.

பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றுதல் மற்றும் குறைத்தல் : பொதுவாக எல்லா லேப்டாப்புகளும் லித்தியம் பேட்டரிகளைக் கொண்டுள்ளன. எனவே பேட்டரியின் தன்மைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நாளும் அதை முறையாக முழு சார்ஜில் வைத்திருப்பது, மற்றும் அதன் சார்ஜை 40 முதல் 50 சதவீதத்திற்கும் குறையாமல் வைத்திருப்பது நல்லது.

பேட்டரியை மாற்றுதல் : பேட்டரியை தேவைக்கேற்ப சார்ஜில் வைத்திருப்பதால் காலப்போக்கில் பேட்டரியின் திறன் பலவீனமடையும். எல்லா எலக்ட்ரானிக் சாதனங்களிலும் இந்த யதார்த்தம் இருக்கிறது. பேட்டரி பலவீனமடையும் போது அது லேப்டாப்பின் ஆயுளையும் பலவீனப்படுத்தும். ஆக உண்மையிலேயே பேட்டரி பலவீனமடையும் போது புதிய பேட்டரியை மாற்றுவது நல்லது. அப்போது லேப்டாப்பின் ஆயுள் கெடாமல் இருக்கும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு